உலகின் முதல் மின்சார விமானம் ஆங்கிலக் கால்வாய் மீது பறந்தது

உலகின் முதல் மின்சார விமானம் ஆங்கிலக் கால்வாய் மீது பறந்தது

முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் மின்சார விமானம் ஆங்கிலக் கால்வாய் மீது பறந்தது. இதனை ஹியூக் துவல் எனும் பிரெஞ்சு விமானி இயக்கினார்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள கலைஸ் எனும் துறைமுகத்தில் இருந்து ஆங்கிலக் கால்வாய் மீது பறந்து நேற்று முன்தின‌ இரவு மீண்டும் பிரான்ஸ் திரும்பினார். இந்த விமானம் இரண்டு இன்ஜின், ஓர் இருக்கை கொண்டதாகும்.

நேற்று ஏர்பஸ் எனும் மின்சார விமானம் ஆங்கிலக் கால்வாய் மீது பறக்கவிடப்பட்டது. இது இரண்டு இருக்கை கொண்ட விமானம் ஆகும்.

இந்த மின்சார விமானப் பறத்தலின் மூலம், முழுக்கவும் மின்சாரத்தினால் இயங்கும் விமானத்தை உருவாக்க முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது. இத்தகைய விமானங்களால் எரிபொருள் மற்றும் சூழலை மாசுபடுத்தும் புகை வெளியாவது போன்றவை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

1909ம் ஆண்டு உலகிலேயே முதன்முதலாக ஆங்கிலக் கால்வாயின் மீது விமானம் செலுத்திய லூயி ப்லெரியோட் என்ற விமானியும் ஒரு பிரெஞ்சுக்காரர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

(riz)