ஐ.தே.கட்சியின் முக்கிய பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமனம்…

ஐ.தே.கட்சியின் முக்கிய பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமனம்…

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கான உறுப்பினர்கள் இன்று(25) பெயரிடப்பட்டுள்ளனர்.

அதன்படி , கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அகில விராஜ் காரியவசம், தவிசாளராக அமைச்சர் கபீர் ஹசீம் மற்றும் தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் , ரவி கருணாநாயக்க உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் , கட்சியின் பொருளாளராக ஹர்ச டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Rishma