2019 உலகக் கிண்ணம் வரையில் விளையாடுமாறு டி வில்லியர்சிடம் கெஞ்சினேன் – முடிவு தெரியவில்லை…

2019 உலகக் கிண்ணம் வரையில் விளையாடுமாறு டி வில்லியர்சிடம் கெஞ்சினேன் – முடிவு தெரியவில்லை…

2019 ஆண்டு உலகக் கிண்ணத் தொடர் வரை விளையாடலாமே என டி வில்லியர்சிடம் கூறியதாக தென்னாபிரிக்கா அணியின் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி, அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாபிரிக்காவின் டி வில்லியர்ஸ் திடீரென்று சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இவரின் அதிரடி ஆட்டத்தை பார்க்க பலரும் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் ரசிகர்களுக்கும் மட்டுமின்றி தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தென்னாபிரிக்கா அணியின் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் தெரிவிக்கையில்;

“டி வில்லியர்சின் அறிவிப்பு எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓய்வு அறிவிப்பதற்கு முன்னர் அன்றைய நாள் காலை எனக்கு போனில் கூறினார். அதன் பின் நீண்ட நேரம் பேசினார். நீங்கள் செய்வது இந்த நேரத்தில் சரிதான் என நினைக்கிறீர்களா என அழுத்தமாக கேட்டேன்.

அவர், நான் எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அனைவரிடமும் பேசிவிட்டேன். நான் மிகவும் களைப்படைந்து விட்டேன் என கூறினார்.
அவர் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் ஐபிஎல் தொடரில் ஒரு அற்புதமான ஸ்பைடர் மேன் கேட்ச் பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

அதுமட்டுமின்றி அந்த கேட்ச் மூலம் அவர் எப்படி கிரிக்கெட்டை ரசித்து ஆடுகிறார் என்பதையும் பார்க்க முடிந்தது. ஆனால் திடீர் ஓய்வு அதிர்ச்சியை கொடுத்தது.

டெஸ்ட் போட்டிகளை விட்டுவிட்டு, ஒருநாள் போட்டிகளில் மட்டும் , அதுவும் உலகக்கிண்ணம் வரை மட்டுமே விளையாடலாமே ஏபி என்று கேட்டேன். இறுதியில் அவரது முடிவிலே உள்ளது என்று விட்டுவிட்டேன்..” என்று கூறியுள்ளார்.