2019 – IPL வருமானத்தின் படி,  மஹேல 2.25 கோடி… மாலிங்க 1.5 கோடி… (முழு விபரம்)

2019 – IPL வருமானத்தின் படி, மஹேல 2.25 கோடி… மாலிங்க 1.5 கோடி… (முழு விபரம்)

ஐபிஎல் தொடரில் அணி வீரர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பள விபரம் குறித்து தெரிய வந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ. 20 கோடியும், இறுதிப் போட்டியில் தோற்ற ஐதராபாத் அணிக்கு ரூ. 12.5 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஒவ்வொரு அணிக்கும் பயிற்சி கொடுத்த பயிற்சியாளர் சம்பளமாக பெற்ற தொகை குறித்து தெரிய வந்துள்ளது. அவை வருமாறு…

  • 4 கோடி – டேனியல் விட்டோரி (பெங்களூரு தலைமை பயிற்சியாளர் )
  • 4 கோடி – ஆசிஸ் நெஹரா (பெங்களூரு பவுலிங் பயிற்சியாளர் )
  • 3.7 கோடி – ரிக்கி பாண்டிங் (டெல்லி தலைமை பயிற்சியாளர் )
  • 3.2 கோடி – ஸ்டீபன் பிளமிங் (சென்னை தலைமை பயிற்சியாளர் )
  • 3 கோடி – விரேந்திர சேவாக் (பஞ்சாப் அணி ஆலோசகர்)
  • 2.7 கோடி – சேன் வார்னே (ராஜஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர் )
  • 2.25 கோடி – ஜாக் காலிஸ் (கொல்கத்தா அணி தலைமை பயிற்சியாளர் )
  • 2.25 கோடி – மஹேலா ஜெயவர்தனே ( மும்பை அணி தலைமை பயிற்சியாளர் )
  • 2 கோடி – விவிஎஸ் லக்‌ஷ்மன் மற்றூம் டாம் மூடி (ஐதராபாத் பயிற்சியாளர்கள்)
  • 1.5 கோடி – லசித் மலிங்கா (மும்பை அணி பவுலிங் பயிற்சியாளர் )
  • 1.5 கோடி – கேரி கிரிஸ்டன்(பெங்களூரு அணி பேட்டிங் பயிற்சியாளர் )