துருக்கி கடற்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி…

துருக்கி கடற்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி…

ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் அகதிகள் சென்ற படகு துருக்கி நாட்டின் கடற்பகுதியில் கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் 15 அகதிகள் சென்ற படகு துருக்கி நாட்டின் அன்ட்டாலயா மாகாணம், டெம்ரே மாவட்டத்துகுட்பட்ட பிரபல சுற்றுலாத்தலம் அருகே கடற்பகுதியில் கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள், ஒருபெண் உள்பட 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நடுக்கடலில் சிக்கி தத்தளித்த ஒரு பெண் உட்பட 5 பேரை உயிருடன் மீட்ட துருக்கி கடலோரக் காவல் படையினர், காணாமல்போன ஒருவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.