கௌதமாலாவில் பியுகோ எரிமலை வெடிப்பு – 7 பேர் உயிரிழப்பு..

கௌதமாலாவில் பியுகோ எரிமலை வெடிப்பு – 7 பேர் உயிரிழப்பு..

கௌதமாலா தலைநகரை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள பியுகோ எரிமலை வெடித்ததில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த எரிமலை கடந்த சில நாட்களாக வெடித்து சிதறும் நிலையில் இருந்தது. இதனால் அதிலிருந்து கரும்புகை வெளியாகியமையடுத்து அப்பகுதியில் இருந்தவர்களை வெளியேறுமாறு அரசு அறிவித்தது.

இந்நிலையில், இந்த எரிமலை நேற்றிரவு வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து எரிமலை குழம்பு அனைத்து திசைகளிலும் வழிந்தன. இந்த எரிமலை வெடிப்பிற்கு பின்னர் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிமலை தொடர்ந்து வெளிவரும் சாம்பலின் காரணமாக கௌதமாலா நகரத்திலுள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

மேலும், தேசிய அளவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலஸ் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.