எதிர்காலத்தில் 24 மணி நேரமானது, 25 மணி நேரமாக அதிகரிக்கப்படும்…?

எதிர்காலத்தில் 24 மணி நேரமானது, 25 மணி நேரமாக அதிகரிக்கப்படும்…?

எதிர்காலத்தில் நாள் ஒன்றுக்கான நேரம் 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அமெரிக்காவின் விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

சுமார் 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. ஆனால் வருடத்திற்கு 3.82cm தூரம் நிலவு பூமியின் அருகிலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தது.

முதலில் இருந்தததை விட நிலவு தற்போது 44,000 Km தூரம் பூமியை விட்டு விலகி சென்றுள்ளது. இதன் காரணமாகவே தற்போது ஒரு நாள் என்பது 24 மணி நேரமாகவுள்ளது. ஆனால் 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது 18 மணி நேரமும் 41 நிமிடங்களும் மட்டுமே இருந்தது.

எனவே நிலவு தற்போது நகரும் அளவை கணிப்பிட்டு பார்த்தால் எதிர்வரும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக கணிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.