டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கதறி அழுத ஸ்ரீதேவி மகள்… (photos)

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கதறி அழுத ஸ்ரீதேவி மகள்… (photos)

ஜான்வி நடித்து வந்த ‘தடக்’ படம் தற்போது முடிவடைந்து நேற்று அப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இதன்போது ஜான்வி தனது தாயை எண்ணி சோகத்திலிருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் முகத்தை கைகளால் மூடியபடி இருந்தார். ‘எனது முதல் படத்தின் டிரெய்லர் வெளியாகும் இத்தருணத்தில் எனது தாயை ரொம்பவே நான் மிஸ் செய்கிறேன்’ என அவர் தெரிவித்தார்.

நடிகை ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வியை நடிகையாக திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசை வெளியிட்டிருந்தார். அவர் உயிருடன் இருந்தபோதே, ‘தடக்’ படத்தில் ஜான்வி ஹீரோயினாக நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.

அவருக்கான ஆடைகளை தேர்வு செய்வது, மேக்அப்பில் கவனம் செலுத்துவது என அக்கறையாக கவனித்தும் வந்தார். இதன் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில்தான் ஸ்ரீதேவி மரணம் அடைந்தார்.

ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி திரையில் தனது அக்கா ஜான்வியை பார்த்ததும் கண் கலங்கினார். கண்ணீர் விட்டுகதறியபடி ஜான்வியை கட்டி அணைத்துக்கொண்டார்.

இருவரும் சோகத்தில் மூழ்கியதை கண்டு அங்கிருந்தவர்கள் மனம் உருகினர்.

Image result for Dhadak trailer launch

Image result for Dhadak trailer launch

Image result for Dhadak trailer launch

Image result for Dhadak trailer launch

Related image