தபால் சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு…

தபால் சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு…

தபால் சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக 5ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக சுமார் ஆயிரம் தபால் பொதிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தேங்கிக் கிடப்பதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

முத்திரை விற்பனை, பொதி சேவை, பணம் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தபால் திணைக்களத்துக்கு 15 கோடி ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தபால் திணைக்களத்திற்கான தனியான ஆட்சேர்ப்பு முறைமையை நடைமுறைப்படுத்தல் மற்றும் பதில் உப தபால் நிலைய அதிபர்களின் பணியை பாதுகாத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.