வெனிசுலா துணை ஜனாதிபதியாக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு…

வெனிசுலா துணை ஜனாதிபதியாக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு…

வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அந்நாட்டின் துணை ஜனாதிபதியாக டெல்சி ரொட்ரிகஸ் என்பவரை தேர்வு செய்துள்ளார்.

வெனிசுலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ ஜனாதிபதியாக கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்தார். சமீபத்தில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன.

இதையடுத்து அதிக சிரமம் இன்றி நிக்கோலஸ் மதுரோ மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றினார். இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இருப்பினும், அந்நாட்டின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றார்.

இந்நிலையில், மந்திரி சபையில் மதுரோ சில மாற்றங்கள் செய்துள்ளார். அதன்படி அந்நாட்டின் துணை ஜனாதிபதியாக டெல்சி ரொட்ரிகஸ் என்பவரை நிக்கோலஸ் மதுரோ தேர்வு செய்துள்ளார். டெல்சி அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாகவும் இருந்துள்ளார்.