பாரிய அளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்க நடவடிக்கை…

பாரிய அளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்க நடவடிக்கை…

பாரியளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றங்களின் முதலாவது நீதிமன்றம் அடுத்த மாதம் ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

திருடர்கள் பிடிக்கப்படுவதில்லை என மக்கள் குறை கூறுகிறார்கள். ஆனால் திருடர்கள் பிடிக்கப்படுகிறார்கள். திருடர்கள் விசாரிக்கப்படுகிறார்கள் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளர்.

இவர்களுக்கு எதிராக முறையாக வழக்கு தொடுத்து சாட்சிகளின் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை பொதுவான நீதிக் கட்டமைப்பில் செய்ய முடியாது. இதற்காகவே விசேட நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன.

முதல் நீதிமன்றம் ஜூலை இரண்டாம் வாரம் இயங்கத் தொடங்கும் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.