தமக்களித்த உத்தியோகபூர்வ வாகனத்தை மீளளித்தார் – ரவி

தமக்களித்த உத்தியோகபூர்வ வாகனத்தை மீளளித்தார் – ரவி

அரசாங்க சொத்துக்களை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவில்லை என்பதனை எடுத்துக்காட்டும் வகையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சிற்கு உத்தியோக பூர்வ வாகனங்களை ஒப்படைத்துள்ளார்.

உத்தியோகபூர்வ வாகனங்களின் சாவிகளை நிதி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் நிஷான் மென்டிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த எடுத்துக்காட்டிற்கமைய அனைத்து அமைச்சர்களும் செயற்படுவார்கள் என குறித்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அமைச்சர் அல்லது உறுப்பினர்கள் விதிகளை மீறி செயற்பட்டால் இது தொடர்பில் உடனடியாக அது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை ஒன்றியையும் முன்வைத்துள்ளார்.

ஒகஸ்ட் மாதம் 17ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி ஒன்று உருவாகும் எனவும் அவ் வெற்றியை எவ்வித தேர்தல் விதிகளையும் மீறாமல் பெற்றுக்கொள்வதற்கு கட்சி எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(riz)