தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஐரோப்பிய ஒன்றியம்

தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இதன் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் கண்காணிப்பு பணிகளை இன்று ஆரம்பித்துள்ளது.

தோர்தலை கண்காணிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு திட்டத்தின் (Election Observation Mission – EOM) தலைமை அதிகாரியாக ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினரான கிறிஸ்டியன் ப்ரேடா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் எதிர்வரும் சில நாட்களில் கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடைபெற இருக்கும் தேர்தலை எந்தவித குறுக்கீடுகளும் இல்லாமல் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக கண்காணிப்பதே எமது நோக்கம் என்று கிறிஸ்டியன் ப்ரேடா மேலும் தெரிவித்துள்ளார்.

(riz)