ஐ.தே.மு வின் கொள்கைப் பிரடகனம் அடுத்த வாரத்தில் வெளியீடு

ஐ.தே.மு வின் கொள்கைப் பிரடகனம் அடுத்த வாரத்தில் வெளியீடு

ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைப் பிரகடனம் அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அக்கொள்கைகளுள், ஓராண்டு காலத்திற்குள் பத்து லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்குதல், பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், மக்களுக்கு பல்வேறு வழிகளில் நிவாரணங்களை வழங்குதல் போன்ற நலன் திட்டங்களை உள்ளடக்கிய ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைப் பிரகடனம் விரைவில் வெளியிடப்படும்.

மேல் மாகாணத்தை நாகரிக வலயமாக மாற்றுதல், 2500 கிராம வீதிகளை புனரமைத்தல், பாரியளவிலான முதலீட்டு திட்டங்களை ஆரம்பித்தல், பெந்தொட்டை முதல் மிரிஸ்ஸ வரையிலான பகுதிகளை சுற்றுலா வலயமாக மாற்றுதல், வாடகை வீடுகளில் வாழ்ந்து வருவோருக்கு சொந்த வீடுகளை வழங்குதல், குருணாகலில் வொக்ஸ்வோகன் கார் உற்பத்தி கைத்தொழிற்சாலை ஒன்றை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படக் கூடிய நல்லாட்சி அரசாங்கமொன்றை அமைக்க மக்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர்.

பிரதமர் முன்னதாக அறிவித்ததற்கு இணங்க ஒட்டு மொத்த நாடாளுமன்றமும் அமைச்சரவையாக கருதப்பட்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கயந்த கருணாதிலக்க நேற்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

(riz)