நம் நாட்டு முஸ்லிம்கள் அரசியல் தன்னிறைவை இன்னும் அடையவில்லை – ரிஷாத்

நம் நாட்டு முஸ்லிம்கள் அரசியல் தன்னிறைவை இன்னும் அடையவில்லை – ரிஷாத்

முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைகள் இருந்த போதும் எமது நாட்டு முஸ்லிம்கள் அரசியல் தன்னிறைவை அடையவில்லை என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வர்த்தக,வாணிப துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் நாம் அரசியலில் தன்னிறைவை பெறுவதற்கு பல்வேறு தியாகங்களை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிடும் வைத்திய கலாநிதி ஷாபியின் வெற்றியினை உறுதிப்படுத்தும் வகையில் புத்தி ஜீவிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடான கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு குருநாகலயில் இடம் பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும்; அமைச்சர் றிசாத் பதியுதீன்  கருத்துரைக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

குருநாகல் மாவட்டம் வடமேல் மாகாணத்தில் முக்கியமானதொரு கேந்திர மையமாகும்.இங்கிருந்து கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாது போனமைக்கு காரணங்களாக சிறுபான்மை முஸ்லிம் கட்சி தனித்து போட்டியிட்டமையே,பெரும்பான்மை கட்சியில் வேட்பாளர் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு அந்த சிறுபான்மை கட்சி முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியிருந்திருந்தால் பாராளுமன்ற பிரவேசம் முஸ்லிம் ஒருவருக்கு கிடைத்திருக்கும்.

இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தனித்து போட்டியிடுகின்றது.இதற்கான காரணம் என்னவென்றால் அங்கு ஒரு முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கமல்ல.மாறாக அந்த பிரதி நித்திதுவத்தை இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற  நோக்கில் என்பதை எம்மால் புரிந்து கொள்ளமுடிகின்றது.இதே போல் குருநாகல் மாவட்டத்திலும் இந்நிலையினை ஏற்படுத்த முற்பட்ட போது ஜக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

நாம் புதிய அரசை உருவாக்கும் போது செய்து கொண்ட உடன்படிக்கையடிப்படையில் வேட்பாளர்களை எங்கு நாங்கள் நிறுத்த வேண்டும் என்ற விடயத்தை செய்திருந்தோம்.அதனடிப்படையில் எமக்கு வழங்கப்பட்ட ஆசன ஒதுக்கீடு சிலரின் எதேச்சதிகாரத்தினால் இல்லாமல் ஆக்கப்பட்டது,இது தொடர்பில் நாம் மட்டுமல்ல ஜக்கிய தேசிய கட்சியின் தலைமையிடத்தில் ஜதேக,மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட பெரும்பாலான பிரதேச சபை உறுப்பினர்கள் கூட்டாக முன் வைத்த கோறிக்கையின் பலனாக வைத்திய கலாநிதி ஷாபி போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.

எது எப்படி இருந்தாலும் இம்முறை குருநாகல் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கான முஸ்லிம் பிரதிநதிதித்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளோம்.இந்த சந்தர்ப்பத்தை குருநாகல் மாவட்ட மக்கள் தவறவிடுவார்கள் என்றால் இனி அவர்களால் ஒரு பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

குருநாகல் மாவட்டத்தில் இம்முறை ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகின்ற பொது ஜதேகட்சியே அமோக வெற்றி பெரும் என்ற புள்ளிவிபரங்கள் இப்போதே வெளியாக ஆரம்பித்துள்ளன.முஸ்லிம்களை அழிப்பதற்கு உருவாக்கப்பட்ட பொதுபலசேனாவின் ஆதரவு வேட்பாளர்கள் பிரதான கட்சியில் போட்டியிடுகின்றார் அவரை இந்த மாவட்ட மக்களும் நிராகரிப்பதன் மூலம் நாட்டில் மக்கள் விரும்பும் நல்லாட்சியினை புதிய அரசியல் மக்கள் அனுபவிக்க முடியும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.