இறக்குமதி செய்யப்படும் துணி வகைகள் மீதான வற் வரி குறைப்பு…

இறக்குமதி செய்யப்படும் துணி வகைகள் மீதான வற் வரி குறைப்பு…

இறக்குமதி செய்யப்படும் துணி வகைகள் மீதான 15 சதவீத பெறுமதி-சேர் வரி 5 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த வரிக் குறைப்பை நேற்று முதல் அமுலாக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கைச்சாத்திட்டுள்ளார்.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா சலுகைக் கடன் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ஆடை உற்பத்தித் துறை சார்ந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது வரிக்குறைப்பின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆடை உற்பத்தித் துறை சார்ந்தோரின் கோரிக்கைக்கு அமைய வரிக் குறைப்புப் பற்றிய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ துணிக்காக 100 ரூபா செஸ் வரி அறவிடப்பட்டது.