தெரேசா மே’யிற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு…

தெரேசா மே’யிற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு…

பிரெக்சிற் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-யிற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க்கின் அலுவலகத்தினால் கடந்த 03ம் திகதி இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டஸ்க் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒக்டோபர் 18, மாநாட்டின் போது பிரெக்சிற் தொடர்பாக விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றனர் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பை பிரதமர் மே ஏற்றாரா அல்லது நிராகரித்தாரா என்பது தொடர்பாக பிரதமர் மே அலுவலக தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.