அமெரிக்காவை மிரட்டும் மைக்கேல் புயல்…

அமெரிக்காவை மிரட்டும் மைக்கேல் புயல்…

“மைக்கேல்” என பெயரிடப்பட்டுள்ள இப்புயல் அமெரிக்கா அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ளது. இது புளோரிடாவை நோக்கி நெருங்கி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மைக்கேல் புயல் 3-வது வகையை சேர்ந்தது என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உருவாகியுள்ள மைக்கேல் புயல் காரணமாக மணிக்கு 12 கி.மீட்டர் வேகத்தில் காற்றுடன், கடும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

புளோரிடாவில் உள்ள 26 கவுண்டி பகுதிகளுக்கும் அம்மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் அவசர நிலை அறிவித்துள்ளார். இது அபாயகரமான புயல் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இங்குள்ள புளோரிடா பல்கலைக்கழகம் ஒருவாரம் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.