அரசியலமைப்புப் பேரவைக்கு பிரதிநிதிகள் மூவர் நியமனம்…

அரசியலமைப்புப் பேரவைக்கு பிரதிநிதிகள் மூவர் நியமனம்…

அரசியலமைப்புப் பேரவைக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் மூவர் இன்று(11) நியமிக்கப்பட்டுள்ளனர்.

கலாநிதி ஜயந்த தனபால, என். செல்வகுமரன் மற்றும் ஜாவிட் யூசுப், ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய, சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மூவரும் இதற்கு முன்னர் பெயரிடப்பட்டிருந்தனர்.

இவர்களின் பெயர் விபரம் பாராளுமன்றத்திற்கு இன்று(11) சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, அதற்கான அங்கீகாரம் சபையினால் சற்றுமுன்னர் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.