நாளை முதல் மாலை வேலைகளில் மழை பெய்யக்கூடும்…

நாளை முதல் மாலை வேலைகளில் மழை பெய்யக்கூடும்…

நாடு பூராகவும் நாளை(16) தொடக்கம் மாலை வேலைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வலிமைண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய , ஊவா , சப்ரகமுவ , வடமத்திய , மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.