சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை…?

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை…?

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை யோசனை ஒன்றினை பராளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பில் அரசு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற சபை கூடலின் பின்னர் ஆரம்ப ஓரிரு நாட்களில் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகவும், குறித்த யோசனைக்கு தற்போது ஜனாதிபதி சட்டத்தரணியினால் வரைவு ஒன்று ஆயத்தப்படுத்துவதாக அரசினை பிரதிபலிக்கும் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுயாதீனமாக இயங்க வேண்டியது சபாநாயகரின் கடமை என்றும், அதனை கரு ஜயசூரிய கடந்த நாட்களில் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும், பாராளுமன்றத்தில் சபநாயகராக கடமையாற்றாது ஐக்கிய தேசியக் கட்சியின் தேவையின் நிமித்தம் நடவடிக்கைகளை மேற்கொண்டமையானது தெளிவாக காணக்கூடியதாக இருந்ததாகவும் குறித்த பிரதிநிதி தெரிவித்திருந்தார்.