பாராளுமன்றினை கலைக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்டரீதியானது – சட்டமா அதிபர்..

பாராளுமன்றினை கலைக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்டரீதியானது – சட்டமா அதிபர்..

பாராளுமன்றத்தினை கலைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானமானது அரசியல் அமைப்பிற்கு உட்பட்டது எனவும் 19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜனாதிபதிக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றில் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற கலைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டினை தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த மனு மீதான விசாரணைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.