பதவி விலகுகிறார் ஜனக பண்டார தென்னகோன்

பதவி விலகுகிறார் ஜனக பண்டார தென்னகோன்

மாகாண சபைகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இன்று தனது பதவியினை இராஜினாமாச் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி அண்மையில் தேசத்துக்கு ஆற்றிய சர்ச்சைக்குரிய உரையை அடுத்தே இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(riz)