பொலிஸ் பரிசோதகர்கள் 65 பேருக்கு பதவி உயர்வு…

பொலிஸ் பரிசோதகர்கள் 65 பேருக்கு பதவி உயர்வு…

பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய பொலிஸ் பரிசோதகர்கள் 65 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் உதவிப் பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த குழுவில் உள்ள 48 பேர் உயர் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கொன்றில் ஒருமித்ததாக கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், உதவிப் பொலிஸ் அதிகாரப் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளது.

எஞ்சிய 17 பேரும் கடந்த 2014ம் ஆண்டு உதவிப் பொலிஸ் அதிகாரிகளுக்கான நேர்முகப் பரீட்சையில் பெறப்பட்ட புள்ளிகளுக்கு அமைய நியமிக்கப்பட்டதாகவும்பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

2018 ஜூலை மாதம் 10ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.