காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா…

காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா…

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் நடிகையாக இருக்கும் சுவேதா பாசுவுக்கும், இந்தி பட இயக்குநர் ரோகித் மிட்டலுக்கும் புனேவில் திருமணம் நடந்தது.

இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுவேதா பாசு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், மை, சந்தமாமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சுவேதா பாசுவுக்கும் இந்தி பட இயக்குனர் ரோகித் மிட்டலுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.

சுவேதா பாசு – ரோகித் மிட்டல் திருமணம் புனேவில் பெங்காலி முறைப்படி நேற்று நடந்தது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.