அதிவேக நெடுஞ்சாலையில் மேலதிக நுழைவாயில் திறப்பு…

அதிவேக நெடுஞ்சாலையில் மேலதிக நுழைவாயில் திறப்பு…

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை -கொடகம, காலி – பின்னதுவ ஆகிய பரிமாற்று நிலையங்களில் மேலதிக நுழைவாயில் ஒன்று திறக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த மேலதிக நுழைவாயிலுக்கு அவசியமான ஊழியர்களும் அந்தந்த நிலையங்களில் இணைக்கப்பட்டுள்ளனர் என அதிவேக நெடுஞ்சாலை பரிபாலன முகாமையாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு எதுவித சிரமும் இன்றி, நேரதாமதம் இன்றி, பயணங்களை மேற்கொள்வதற்கே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.