கல்கிஸ்ஸையில் வீடு ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்…

கல்கிஸ்ஸையில் வீடு ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்…

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வீடு ஒன்றில் இன்று(20) துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டின் பிரதான நுழைவாயில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.

சம்பவத்தில் எந்த ஓர் நபருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.