மாலிங்க – திசர இடையிலான விரிசல் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவதானம்..

மாலிங்க – திசர இடையிலான விரிசல் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவதானம்..

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் லசித் மாலிங்க மற்றும் சகலதுறை வீரர் திஸர பெரேரா ஆகியோர் தொடர்பில் சமூக வலைதளங்களில் கடந்த தினங்களில் வெளியான கருத்துகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவதானம் செலுத்தி வருவதாக கிரிக்கெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட்டின் பேச்சாளர் ஒரு கருத்துத் தெரிவிக்கையில்;

இலங்கை கிரிக்கெட் அணி முகாமைத்துவத்தினருக்கும், வீரர்களுக்கும் இடையில் இது குறித்த கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் லசித் மாலிங்கவின் மனைவியான டானியா பெரேரா அவரது முகநூல் பக்கத்தில் இலங்கை அணியின் சக வீரர் திசர பெரேராவின் புனைப் பெயரான ‘Poor Panda’ எனும் தலைப்பில் புகைப்படமொன்றினை வெளியிட்டு பதயு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.