பானுப்பிரியா உடந்தையுடன் சிறுமிக்கு பாலியல் தொல்லை…

பானுப்பிரியா உடந்தையுடன் சிறுமிக்கு பாலியல் தொல்லை…

1980 – 1990களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை தான் பானுப்ரியா. அவர் தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் தோன்றி வருகிறார். கடைசியாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்யராஜ் மனைவியாக நடித்திருந்தார்.

தற்போது பானுப்ரியா வீட்டில் பணியாற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி புகார் வந்துள்ளது. ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் குறித்த சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.

மாதம் 10,000 ரூபாய் சம்பளத்திற்கு சிறுமியை பானு ப்ரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பினாராம். ஆனால் ஒன்றரை வருடங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை, மேலும் பானு ப்ரியாவின் அண்ணன் கோபால கிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

“இதுபற்றி அறிந்ததும் நேரில் சென்று கேட்டேன். அப்போது ‘எங்களிடம் பணம் உள்ளது. உன் மகளை திருட்டு பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம்’ என மிரட்டினார்கள்” என சிறுமியின் தாய் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி பொலிஸ் புகார் பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.