கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இதை ட்ரை பண்ணி பாருங்க…

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இதை ட்ரை பண்ணி பாருங்க…

தலைமுடி உதிர்வு, முடியின் வேரை வலுப்படுத்தல் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்தல் போன்றவைக்கு சின்ன வெங்காயம் முக்கிய வகுகின்றது. .

சின்ன வெங்காயச் சாற்றை தலையில் 5 நிமிடம் மசாஜ் செய்வதனால் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.

வெங்காயச் சாற்றை பயன்படுத்துவது பக்கவிளைவை ஏற்படுத்தாத ஒரு வழிமுறையாகும்.

# வெங்காயச் சாறு தயாரிக்கும்போது நறுக்கிய சின்ன வெங்காயத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெங்காயம் நன்கு வெந்து அதிலுள்ள சாறு வெளியேறியவுடன் அந்த நீரை வடிகட்டி ஸ்கால்ப்பில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

# பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைமுடியை அலசினால் ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும்.

# கொதிக்கும் தேங்காய் எண்ணெயில் சின்ன வெங்காயச் சாறு கலந்தும் தலையில் தடவலாம். சூடு ஆறியபின்னர் வெங்காய சாறு கலந்த சுத்தமான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி தலை குளித்து வந்தால் தலைமுடி வேரை வலுப்படுத்தி வளர்ச்சியடையச் செய்கிறது.

# இதே போல தேனுடன் சின்ன வெங்காயச் சாறு கலந்தும் தலைமுடிக்கு தடவலாம். 2 வாரங்களில் முடி உதிர்வது குறைந்து 4 வாரத்தில் புதிதாக முடி வளரும்.

# ஆலிவ் எண்ணெயை 15 நிமிடம் தலையில் தேய்த்து பின்னர் வெங்காயச் சாற்றினைக் கொண்டு மசாஜ் செய்து 10 நிமிடத்துக்குப் பின் ஷாம்பு போட்டு மிதமான சுடுநீரில் தலையை அலசினால் தலைமுடி நன்கு வளரும்.