உலக அரசியலில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு இலங்கையே.. – ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி…

உலக அரசியலில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு இலங்கையே.. – ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி…

(FASTNEWS | COLOMBO) – இன்று(08) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கையில்;

பெண் என்பவர் அஹிம்சையின் மறுவுருவம் என மகாத்மா காந்தி கூறியிருக்கின்றார்.இருப்பினும் சமூகத்தினால் பெண்ணுக்கு உரித்தாக்கப்பட்டிருக்கும் பாரம்பரிய பாத்திரத்திற்கு அப்பால் சென்று அவளால் சிகரத்தை அடைய முடியும் என நவீன பெண்ணானவள் தனது செயற்பாடுகளில் மூலம் நிரூபித்திருக்கின்றாள்.

உலக அரசியலில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு என்ற பெயரைப் பெற்றிருக்கும் இலங்கை, அநேக ஆசிய நாடுகள் வாக்குரிமையை வென்றெடுப்பதற்கு நிறைவேற்றதிகாரம் கொண்ட முதல் பெண் ஜனாதிபதியையும் உருவாக்கிய பெருமையை பெற்றிருக்கின்றது.

அத்தோடு எவரெஸ்ட் உச்சியை எட்டிய பெண்களின் வரிசையில் கடந்த வருடம் இலங்கை பெண்மணி ஒருவரும் இணைந்து கொண்டமையும் இலங்கைக்கு கிடைத்த ஒரு பெருமையாகும்.

சமூகத்தில் பெண்ணுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிராக எழும் சகல வன்முறைகளையும வேறுபாட்டை வெளிப்படுத்தும் பெண் பிள்ளைகளுக்கும் எதிராக எழும் சகல வன்முறைகளையும் வேறுபாட்டை வெளிப்படுத்தும் பராமரிப்புகளையும் அடியோடு அகற்றுவதற்கும் சமமானவர்கள் என்ற வகையில் வருமானங்களை ஈட்டுவதற்கும் அது பற்றிய தீர்மானங்களை எடுப்பதற்கும் அரச சேவையில் உச்சியை அடைந்தது போல் அரசியல் தீர்மானங்களை இயற்றும் இடங்களிலும் முதலிடம் வகிப்பதற்கும் அத் தீர்மானங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் இலங்கை பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

அத்தகையதோர் உயரிய நிலைமைக்கு இலங்கை பெண்களை கொண்டு செல்லும் இலக்குடன் இலங்கையில் கொண்டாடப்படும் மகளிர் தின கொண்டாட்டத்திற்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.