பிரபல பாடகர் ஜனநாத் வரகாகொட கைது…

பிரபல பாடகர் ஜனநாத் வரகாகொட கைது…

(FASTNEWS|COLOMBO) கிரில்லவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பில் பிரபல சிங்கள பாடகர் ஜனநாத் வரகாகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

இதனையடுத்து நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவர் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கிரில்லவெல பிரதேசத்தில் மஞ்சள் கடவையால் பாதையை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.