குடிமக்களுக்கு பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாமென அமெரிக்க எச்சரிக்கை

குடிமக்களுக்கு பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாமென அமெரிக்க எச்சரிக்கை

(FASTNEWS| COLOMBO)- பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வது குறித்து அமெரிக்க அரசு, புதிய பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறித்த பயண அறிவுறுத்தலில், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகள் வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.