கடுமையாக விமர்சனங்களை தொடர்ந்து, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தீர்மானம்…

கடுமையாக விமர்சனங்களை தொடர்ந்து, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தீர்மானம்…

(FASTGOSSIP| COLOMBO) – இம்முறை உலகக் கிண்ண தொடருக்கான பங்களாதேஷ் ஜெர்சியானது, பாகிஸ்தான் அணியின் ஜெர்சியின் தோற்றத்தில் உள்ளது என்ற விமர்சனம் எழுந்ததால் அதன் பங்களாதேஷ் அணியின் ஜெர்சியை மாற்றி பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் வடிவமைத்துள்ளது.

அந்த நாட்டின் கொடியை போன்றே எப்போதும் அந்நாட்டு கிரிக்கெட் அணி ஜெர்சியில் பச்சை, சிவப்பு நிறங்கள் இருக்கும். தற்போது,அறிமுகம் செய்யப்பட்ட ஜெர்சியில் சிவப்பு நிறம் இடம்பெறவேயில்லை.

மேலும் அது பாகிஸ்தானின் ஜெர்சியை போலவே இருப்பதாகவும் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்த நிலையில் பங்களாதேஷ் அணி ஜெர்சியை மாற்றி உள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஜெர்சியில் சிவப்பு நிறம் இணைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.