எதிர்வரும் 10ம் திகதி நாட்டிலுள்ள அரச முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் மீளவும் திறப்பு

எதிர்வரும் 10ம் திகதி நாட்டிலுள்ள அரச முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் மீளவும் திறப்பு

(FASTNEWS | COLOMBO) – நாட்டிலுள்ள அரச முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 10ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக, நாட்டின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, நடைபெறாது விடுபட்ட பாடசாலை நாட்களை ஈடு செய்வதற்கான தீர்மானங்கள் எதுவும் இதுவரை கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படவில்லை.

சிங்கள மற்றும் தமிழ் அரச பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் மாத விடுமுறைக் காலத்தில் அதனை ஈடு செய்வதற்கான யோசனைகள் பல தரப்பிலும் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் விடுமுறை வழங்கப்படுவதில்லையென்பதனால் மாற்று வழி முறையொன்று குறித்து யோசிக்க வேண்டியுள்ளதாகவும் கல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.