இரண்டாவதாக திருமணம் செய்யும் மைனா

இரண்டாவதாக திருமணம் செய்யும் மைனா

(FASTGOSSIP|COLOMBO) – திரைப்படம், தொலைகாட்சி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை நந்தினி, தொலைகாட்சி நடிகரை இரண்டாவதாக திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களிலும் நந்தினி நடித்துள்ளார். தொலைகாட்சி தொடர்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதுடன், தொலைகாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மைனா நந்தினி என்று இவரை அழைத்தனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கார்த்திகேயன் என்பவரை நந்தினி காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி ஒரு வருடத்திலேயே கார்த்திகேயன் தற்கொலை செய்துகொண்டார்.

கணவர் இறந்து சில மாதங்களுக்கு பிறகு நந்தினி மீண்டும் தொலைகாட்சி தொடர்களில் நடிக்க தொடங்கினார்.

இந்த நிலையில் தொலைகாட்சி நடிகர் யோகேஷ் என்பவரை காதலிப்பதாக நந்தினி அறிவித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக இருவரும் நண்பர்களாக பழகி வருவதாகவும், தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.