Spider Man 3D தொழில்நுட்பத்தில் எதிர்வரும் ஜூலையில்

Spider Man 3D தொழில்நுட்பத்தில் எதிர்வரும் ஜூலையில்

(FASTGOSSIP|COLOMBO)- 2017ல் வெளிவந்த spider man homecoming படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது Spider-Man: Far From Home. இந்த spider man 3D படம் எதிர்வரும் ஜூலை 5ம் திகதி தமிழிலும் வெளியாக உள்ளது.

முதல் பாகத்தில் ஸ்பைடர் மேனாக நடித்த டாம் ஹோலேண்ட் இந்த படத்திலும் ஸ்பைடர் மேனாக நடித்துள்ளார்.

ஐரோப்பா நாடுகளை சுற்றிப் பார்க்க கிளம்பும் டாமுக்கு முக்கிய பொறுப்பும் வருகிறது. மனித குலத்துக்கு பெரும் ஆபத்துகளை விளைவிக்க தயாராகும் சில சக்திகளை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயம் டாமுக்கு ஏற்படுகிறது.

முதல் பாகம் இயக்கிய ஜான் வாட்ஸ் இந்த படத்தையும் இயக்கியுள்ளதுடன், ஜென்டயா ஹீரோயினாக நடித்துள்ளார்.