28ம் திகதி மீண்டும் வெளியாகும் Avengers Endgame

28ம் திகதி மீண்டும் வெளியாகும் Avengers Endgame

(FASTGOSSIP |COLOMBO) – கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி உலகமெங்கும் வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் மீண்டும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது அவெஞ்சர்ஸ் படத்தின் நான்காவது மற்றும் கடைசி பாகமாகும். ரசிகர்கள் விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரையும் மகிழ்வித்த இந்தத் திரைப்படம் வெளியான அனைத்து நாடுகளிலும் வசூல் சாதனை புரிந்து பாக்ஸ் ஆபீசில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதற்கு முன் வசூல் சாதனையில் உலகின் முதல் மூன்று திரைப்படங்களாக வரிசையில் இருந்தவை அவதார், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ்: தி போர்ஸ் அவேக் கன்ஸ் போன்றவை. அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் திரைப்படம் மூன்றாவது மற்றும் இரண்டாவது இடத்திலுள்ள ஸ்டார் வார்ஸ் மற்றும் டைட்டானிக் படங்களை முந்தி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், தற்போது புதிய காட்சிகளுடன் மீண்டும் வெளியாகவுள்ளது. அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம். ஸ்கீரீன் ரேண்ட் என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி அளித்த மார்வெல் மேலாளர் கெவின் பெய்ஜி, ஜூன் 28-ம் திகதி அவெஞ்சர்ஸ் மீண்டும் வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.