தமிழ் படத்தில் இளையராஜா இசையில் ஆங்கிலப் பாடல்

தமிழ் படத்தில் இளையராஜா இசையில் ஆங்கிலப் பாடல்

(FASTGOSSIP|COLOMBO) – பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவாகும் ஒரு தமிழ் படத்தில் ஆங்கிலப் பாடல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா லவ் அண்ட் லவ் ஒன்லி என்ற ஆஸ்திரேலிய படத்துக்கு ஏற்கனவே இசையமைத்து உள்ளார். இந்நிலையில் ஒரு தமிழ் படத்துக்காக ஆங்கில பாடலுக்கு இசையமைத்து உள்ளார்.

முன் பதிவு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கே.எம்.துரைபாண்டியன் இயக்குகிறார். டைரக்டர் கவுதமனின் மகன் தமிழ் கதாநாயகனாக நடிக்கிறார்.

படத்தில் கிராமத்துக்கு செல்லும் கதாநாயகன், கதாநாயகி அங்கு இருக்கும் சிறுவர்களுடன் இணைந்து பாடுவது போல் இந்த ஆங்கில பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு மஞ்ச்லால் செய்கிறார். இவர் மலையாளத்தில் நிறைய படங்களில் பணியாற்றியவர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.