‘ஹதுரு’ இற்கு 4000 டொலர் சம்பளம்.. அதனை விட குறைந்த சம்பளத்தை உலகின் முதல் தர பயிற்சியாளர்கள் கோருகின்றனர்

‘ஹதுரு’ இற்கு 4000 டொலர் சம்பளம்.. அதனை விட குறைந்த சம்பளத்தை உலகின் முதல் தர பயிற்சியாளர்கள் கோருகின்றனர்

(FASTNEWS | COLOMBO) – இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க பெறும் சம்பளத்தினையும் பார்க்க குறைந்த சம்பளத்திற்கு உலகின் முதல் தர பயிற்சியாளர்கள் இலங்கை அணியின் பயிற்சியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

‘‘நான் பயிற்சியாளர்களை விரட்டவில்லை.. 4000 டொலர்கள் சம்பளமாக வழங்குவது என்பது இலங்கையின் ரூபா படி பார்த்தால் அது பாரிய தொரு தொகையாகும். ரூ.70 இலட்சத்தினையும் விட அதிகமாகும். அந்தளவு சம்பளம் எடுத்தால் அதற்கான பிரதிபலன் இருக்க வேண்டும். 35% ஆன போட்டிகளில் தான் வெற்றி தங்கியுள்ளது என்றால் 70 இலட்சம் சம்பளம் வழங்குவதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை.. அவ்வாறு என்றால் வீரர்களுக்கு வழங்குவது போன்று வெற்றி பெற்றால் அதிகளவும், தோல்வி என்றால் குறைந்த சம்பளமும் வழங்கப்பட வேண்டும். தொடர் தோல்விக்கு ஏன் இந்தளவு சம்பளம்..’’

‘‘நான் நம்புகிறேன் இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நல்லதொரு முடிவினை எடுக்கும் என்று… ஏனெனில் இது நமது பணம் இல்லை. மக்கள் பணம் இல்லை என்று ஐ.சி.சி என்றாலும் அதற்கு நாட்டில் சட்டம் ஒன்று உள்ளது. ஹத்துருசிங்க எமது நாட்டவர்.அவரை நாம் பாதுகாக்க வேண்டும். யாருக்கும் வழங்கும் சம்பளத்திற்கு அர்த்தம் ஒன்று வேண்டும். இலங்கையின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள சிறந்த பயிற்சியாளர்கள் அமெரிக்க டொலரில் 25000 கோருகின்றனர். தெளிவான மாற்றம் தெரிகிறதல்லவா.. அடுத்தவர் 20000, மூன்றாவது நபர் 17500 உம் கோருகிறார்’’ எனவும் தெரிவித்திருந்தார்.