சாலிந்த திசாநாயக்கவின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம்

சாலிந்த திசாநாயக்கவின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம்

(FASTNEWS | COLOMBO) – காலஞ் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் 08ம் திகதி இடம்பெறவுள்ளது.

சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் நேற்று(05) காலமானார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அவர் அமைச்சரவை அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் என பதவிகளை வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.