இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்புக்கு பின்னால் இந்தியா உள்ளதா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் சிலர் பங்குகொள்ள மறுப்பு தெரிவித்தமையின் பின்னணியில் இந்தியாவின் தலையீடு இருந்ததாக வெளியான செய்தியை விளையாட்டுத்துறை அமைச்சர் மறுத்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

வீரர்களின் தீர்மானத்தை தாம் மதிப்பதாக கூறியுள்ள அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பும் வீரர்களை தேர்வு செய்து அனுப்பும் பணியில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையிடம் பலம் பொருந்திய அணியொன்று உள்ளதாகவும், பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் மண்ணில் வைத்து வீழ்த்துவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 

COMMENTS

Wordpress (0)