பயணிகள் பேரூந்துகளை கண்காணிக்க ஜிபிஎஸ் தொழில்நுட்பம்

பயணிகள் பேரூந்துகளை கண்காணிக்க ஜிபிஎஸ் தொழில்நுட்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பத்தினூடாக பயணிகள் பேரூந்துகளை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துஷித குலரத்ன தெரிவித்துள்ளார்.

சிறந்த போக்குவரத்து சேவையினை பயணிகளுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், பயணச்சீட்டு இயந்திரங்களை இலவசமாக வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேல் மாகாணத்தை மையப்படுத்தி குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.