பாகிஸ்தான் அல்லாத வேறு இடம் மாற்றப்படாது – பா.​செல்வது உறுதி

பாகிஸ்தான் அல்லாத வேறு இடம் மாற்றப்படாது – பா.​செல்வது உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள் பாகிஸ்தான் அல்லாத வேறு இடம் ஒன்றுக்கு மாற்றப்படாது என தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடையில் இந்த மாத இறுதியில் பாகிஸ்தானில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவுள்ளன.

இந்த தொடர்கள் ஆரம்பமாகவிருக்கும் பாகிஸ்தான் மண்ணில் இரு அணிகளுக்கும் நடுநிலையான போட்டி உத்தியோகத்தர்களை நியமிக்க முன் அங்குள்ள பாதுகாப்பு சூழ்நிலைகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) ஆராய இருப்பதாக பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

இலங்கையின் பிரதமர் அலுவலகம் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின் போது இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் எனவும் எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கையை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபை, தமது பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தினை மீள் பரிசீலனை செய்வதாக குறிப்பிட்டிருந்தது.

இதேவேளை,பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதை தொடர்ந்து இலங்கை அணி பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது உறுதியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் செயலாளர் மொகான் சில்வா இதனை உறுதி செய்துள்ளார்.

பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 27 ஆம் திகதி தொடக்கம், ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.