எதிர்வரும் திங்கள் அனைத்து அரச ஊழியர்கள் சுகயீன விடுமுறை

எதிர்வரும் திங்கள் அனைத்து அரச ஊழியர்கள் சுகயீன விடுமுறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாடாளவிய ரீதியில் அரச நிர்வாக சேவையை சேர்ந்த சகல ஊழியர்களும் எதிர்வரும் (23) திங்கள் கிழமை சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
.

அரச நிர்வாக  சேவைக்காக ரூபாய் 50 000 கொடுப்பனவு வழங்கும் நிதி அமைச்சின் பரிந்துரை அடங்கிய 2019.09.24 திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமச்சரவை பத்திரத்திற்கு அனுமதிவழங்க நடவடிக்ககை எடுப்பதாக அரச நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்

இதன் விளைவாக,அரச நிர்வாகிகளின் தெழிற்சங்கம் எதிர்வரும் திங்கள் அன்று நாடாளவிய ரீதியில் சுகயீன விடுமுறையில் ஈடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.