புகையிரத சேவை வழமைக்கு

புகையிரத சேவை வழமைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்த புகையிரத ஊழியர்களின் சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத ஊழியர்கள் கடந்த 19 ஆம் திகதி முதல் சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கை அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்து முடிவுக்கு வந்துள்ளது.