சஜித்தின் பருப்பு பேருவளையில் வேகாதாம்

சஜித்தின் பருப்பு பேருவளையில் வேகாதாம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சமய ஸ்தானங்களை அழிக்க ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், கடந்த காலத்தில் சில குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட இவ்வாறான நாசகார நிகழ்வுகள் சிலருக்கு மறந்து போயுள்ளதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

“குறித்த சிலரால் அளுத்கம, பேருவளை இஸ்லாமிய பள்ளிகள் சேதமாக்கப்பட்டன. மற்றுமொரு குழுவினர் மாவனல்லையில் புத்தர் சிலைக்கு சேதம் விளைவித்தனர். குறித்த இனவாதங்களை நாம் எதிர்க்க வேண்டும். அவற்றினை வெளிப்படையாக கதைக்க வேண்டும். அவற்றினைக் கதைக்க முதுகெலும்பு இருக்க வேண்டும்.

ஆனால் அளுத்கமை – பேருவளை பகுதிகளில் மத ஸ்தானங்களை சேதப்படுத்தியோரை இன்று சிலர் தலை வழங்குகின்றனர். அளுத்கமை சூத்திரதாரிகளுக்கு இன்று சிலர் மாலை அணிவிக்கிறார்கள்.

எச்சந்தர்ப்பத்திலும் நாட்டில் உள்ள புத்த சிலைகளை சேதப்படுத்த இடமில்லை, அதற்கு உயரிய தண்டனை வழங்கப்படும். இந்நாட்டில் உள்ள இஸ்லாமிய மத ஸ்தானங்களை அளிக்க இடமளிக்கப்பட்ட மாட்டாது. அதற்கு உச்ச தண்டனை வழங்கப்படும். கோவில்களை சேதமாக்க இடமளிக்கவோ, கிறிஸ்தவ ஆலயங்களை சேதப்படுத்தவோ இடம் கிடையாது. அவற்றுக்கான தண்டனைகளை பெற்றுக் கொடுக்கும் காலம் வந்துவிட்டது..” எனத் தெரிவித்திருந்தார்.

அரசியல் எதிரணியினர் தான் சம்பந்தமாக செய்து வரும் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பேருவளை பகுதிகளில் அநேக வரவேற்பு வழங்கப்படுவதாகவும் அதனை குறியாக வைத்தே அமைச்சர் சஜித் பிரேமதாஸ காய் நகர்த்துவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

තම පාලන කාලය තුළ ආගමික සිද්ධස්ථාන විනාශ කිරිමට ඉඩක් නොදෙන බවත් අතීතයේ සිදුවූ දේවල් ඇතැම් පාර්ශ්වයන්ට අමතක වී ඇති බවත් අමාත්‍ය සජිත් ප්‍රේමදාස මහතා පැවැසීය.