எங்களை பார்த்தால் அரசாங்கமே மிரளும்; விஜயின் தந்தையால் பெரும் பரபரப்பு

எங்களை பார்த்தால் அரசாங்கமே மிரளும்; விஜயின் தந்தையால் பெரும் பரபரப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மீது கனடா வாழ் தமிழர் மோசடி புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது, டிராபிக் ராமசாமி படத்திற்காக பெற்ற ரூபாய் 21 இலட்சத்தை மோசடி செய்ததாகவும், பணத்தை விஜயின் தந்தை கொடுக்க மறுப்பதாகவும் கனடா வாழ் தமிழர் முறைப்பாடு கொடுத்துள்ளார்.

மேலும் பணத்தை திரும்ப கேட்டால் மிரட்டல் விடுப்பதாகவும், ரூ.21 இலட்சம் பணத்தை எஸ்.ஏ.சியிடம் இருந்து பெற்றுத் தருமாறு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் எங்களை பார்த்தால் அரசாங்கமே மிரளும் என்று கூறுகிறார் எஸ்.ஏ.சி என கனடா வாழ் தமிழர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.