Prime Grand அதி சொகுசு தொடர்மாடி மனை

Prime Grand அதி சொகுசு தொடர்மாடி மனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 37 மாடிகளும் 332 மனைகளையும் கொண்ட இந்த அதி சொகுசு தொடர்மாடி மனையானது வோட் பிளேஸ் கொழும்பு 07 இல் உள்ள அதி பிரமாண்டமான சொகுசு தொடர்மாடி மனையாகும். அது தனது 28 ஆவது மாடியின் நிர்மாணப் பணிகளை தற்போது ஆரம்பித்துள்ளது.

இலங்கையின் முதற்தர ரியல் எஸ்டேட் நிறுவனமான, Prime Group இன் அதி சிறந்த சொகுசு திட்டமான Prime Grand, வோட் பிளேஸ், 28 ஆவது மாடியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளமையானது ‘Executive Level’ மாடிகளின் நிர்மாணத்தின் ஆரம்பத்தை குறிக்கின்றது. 2021 டிசம்பர் மாதம் குடிபுகுதலுக்கு தயாராக இருக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் முன்னேற்றமானது நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைக்கு மூன்று மாதங்கள் முன்னதாக இடம்பெற்று வருவதாக கட்டுமான பங்காளியான, Maga Engineering
அறிவித்துள்ளது. இலங்கையில் மதிப்புமிக்க வாழ்வியலின் முன்னுதாரணமாகத் திகழவுள்ள Prime Grand நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றானதும், அனைவராலும் மிகவும் விரும்பப்படும் கொழும்பு 07- வோட் பிளேஸில் அமைந்துள்ளது.

இலக்கம் 64, வோட் பிளேஸ், கொழும்பு 07 என்ற இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க முகவரியைக் கொண்டுள்ளதுடன் Prime Grand, ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளதுடன், கொழும்பு 07 இல் உள்ள ஒரே ஒரு அதி உயர் மாடிமனைகளை கொண்ட கட்டிடம் இதுவென்பதுடன் தடையில்லாத காட்சி அனுபவம் மற்றும் பிரைவசியை (Privacy) உறுதிசெய்கின்றது. வோட் பிளேஸ் என்பது நாட்டில் மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாகும். இவ்விடம் வரலாற்று பின்னணியைக் கொண்டதுடன், இலங்கையின் முக்கிய பிரபலங்கள் பலர் இங்கிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘இலங்கையின் மிகச் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘Prime Group’ இன் மணி மகுடமாக ‘Prime Grand’ திகழ்கின்றது. Prime Grand ஆனது சந்தேகத்திற்கு இடமின்றி, அதி-ஆடம்பர குடியிருப்பு வசதிகளைக் கொண்ட குடியிருப்புகளை வழங்கும் Prime Group இன் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். இக் கட்டிடத்தின் வடிவமைப்பு, உட்புற வடிவமைப்பு மற்றும் அதி மதிப்புமிக்க முகவரி ஆகியவை உயர் மட்ட சந்தைக்கான செழிப்பான மற்றும் வசதியான வாழ்க்கைக்கு ஏற்றதாக உள்ளது. இதன் வடிவமைப்பின் அடிப்படை முக்கியத்துவமானது குடியிருப்பாளர்களின் பிரைவசிக்கு வழங்கப்பட்டுள்ளது, குறிப்பாக மின் தூக்கியானது மூலோபாயமாக தனியான மின் தூக்கி லொபியுடன் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒவ்வொன்றுக்கு ஒன்று புலப்படாத வகையில் தனித்துவமான வடிவமைப்பில் வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்றே, Prime Grand அதிநவீன கட்டிடக்கலை, உயர் தரத்திலான உட்புற வடிவமைப்பு மற்றும் தடையற்ற, காட்சி அனுபவத்தை உள்ளடக்கிய மிகச்சிறந்த மதிப்புமிக்க வாழ்க்கை முறையாக இருக்கும் ”என Prime Group இன் தலைவர் பிராமனகே பிரேமலால்
தெரிவித்துள்ளார்.

‘Prime Grand இரண்டு முதல் நான்கு படுக்கையறைகளைக் கொண்ட simplex மற்றும் duplex அடுக்குமாடி மனைகளை உள்ளடக்கியுள்ளதுடன் அவை 4 மாடி இரட்டை உயர வாகன தரிப்பிடம், 40,000 சதுர அடியில் அமைந்த 3 மட்டங்களில் உள்ளக மற்றும் வெளியக சேவைகள் மற்றும் வசதிகளைக் கொண்டது. இதன் உட்புற வடிவமைப்பானது Beteo Geneva இனால் வழிநடாத்தப்படும், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட விருது வென்ற IIDA International இனால் மேற்கொள்ளப்படுகின்றது. அதன்படி, 2, 3 மற்றும் 4 படுக்கை அறை குடியிருப்புகளின் உட்புறங்கள் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவை சிறந்த தரையையும், நன்கு வடிவமைக்கப்பட்ட சமையலறையும் கொண்டுள்ளன. உட்புறத்தின் அதி-ஆடம்பர அம்சங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து குடியிருப்பாளர்களுக்கு வசதியையும் பாதுகாப்பையும் உறுதிசெய்கின்றன, ஒவ்வொரு மனைக்கும் குறைந்தபட்சம் 2 வாகன தரிப்பிடங்கள் வழங்கப்படுவதுடன், மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றல் வசதி, மனைகளுக்கான ஒட்டோமேஷன், 'அந்தந்த தளத்துக்கென மட்டும் ஒதுக்கப்பட்ட ‘access controlled’ மின் தூக்கிகள் மற்றும் ‘நுழைவு அட்டை பின்’ மற்றும் முக்கிய அமைப்புகளுடன் கூடிய ஸ்மார்ட் கதவு பூட்டுகள் ஆகியனவற்றைக் கொண்டுள்ளது.

மேலும், கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஒரேயொரு உயர்மாடி மனைத் தொடராக இது திகழ்வதுடன், அண்மைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் காரணமாக எதிர்வரும் காலத்திலும் Prime Grand மட்டுமே அப்பகுதியில்

உயரமான மாடிமனைத் தொகுதியாக திகழவுள்ளது. இந்தக் கட்டிடமானது 125 மீற்றர் உயரத்தில் அமைந்த, 71 மீற்றர் முடிவிலியான நீச்சல் தடாகத்தைக் கொண்டுள்ளதுடன் இது இலங்கையில் மிக நீண்ட, உயர்ந்த இடத்தில் அமைக்கப்படும் நீச்சல் தடாகமாக அமையவுள்ளது. 32 ஆவது மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளிக்கும் அதேவேளை, அங்கு அமைந்துள்ள பார் மற்றும் உணவகத்தின் சேவையையும் அனுபவிக்க முடியும். இதற்கு மேலதிகமாக, 5 வது மாடி மேடையில் பரந்த பொழுதுபோக்கு பகுதியில், அதி நவீன உடற்பயிற்சி நிலையம், 36 மீட்டர் நீச்சல் தடாகம், சிறுவர்களுக்கான நீச்சல் தடாகம் மற்றும் விளையாடுவதற்கான பகுதி, உலகத் தரம் வாய்ந்த ஸ்பா, பட்மின்டன் மைதானம் மற்றும் நிகழ்வுகளுக்கான மண்டபம், மினி மார்ட் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஆகியனவையும் எதிர்கால குடியிருப்பாளர்களுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் தனித்துவமான தரங்களை பேணுவதற்கு துறையில் கிடைக்கக்கூடிய சிறந்த நிபுணத்துவம் மற்றும் வளங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை Prime Grand கவனத்தில் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் அனைத்து பங்காளர்களும் இந்தத் துறையில் சிறப்பான அனுபவத்தைக் கொண்டவர்கள் என்பதுடன், உலகின் பல பாகங்களைச் சேர்ந்தவர்கள், இதில் கட்டிடத்தின் நிர்மாணப் பங்களாரான Maga Engineering, உள்ளூர் கட்டுமானத்துறையில் பிரபலம் வாய்ந்த பெயர்களில் ஒன்றாகும்.

24 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன், Prime Group ரியல் எஸ்டேட் துறையில் இலங்கை சந்தையில் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது, இது வேகமான மற்றும் எப்போதும் வளர்ந்து வரும் சந்தையின் ஒவ்வொரு பிரிவிற்கும் சேவையை வழங்குவதோடு, ‘பூமியில் ஒரு சிறந்த இடத்தை உருவாக்குதல் என்ற அவர்களின் தூரநோக்கு பார்வைக்கு ஏற்றதாகவும் உள்ளது. ‘Property Guru Asia’வினால் இலங்கையின் சிறந்த கட்டிட நிர்மாண நிறுவனமென மகுடம் சூட்டப்பட்டுள்ளதோடு, Prime Group 2019 ஆம் ஆண்டு இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதுமட்டுமன்றி தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக பணியாற்றி சிறந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு Prime Grant மாடி மனைத் தொடரை சரியான நேரத்தில் ஒப்படைக்கும் பொருட்டும், மேன்மைக்கான அர்ப்பணிப்புடனுடம் Prime Group வலுவாக நிற்கிறது.