உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை – முதலிடம் பிடித்த அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை – முதலிடம் பிடித்த அணி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந் நிலையில், 40 புள்ளிகளையும் பெற்று இந்திய அணி 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி 60 புள்ளிகளுடன் உள்ளது.

நியூசிலாந்துக்கு அடுத்த இடத்தில் இலங்கை அணி 60 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

நான்காவது இடத்தில் அவுஸ்திரேலியா மற்றும் ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்து அணிகள் உள்ளன.

Hindustantimes